காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என தீர்பளித்தது.
2024-க்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது தொடர்பானது மட்டும் என்று நினைத்தால் அது தவறு
இது மாநில உரிமைகள் சார்ந்த ஒரு முக்கிய தீர்ப்பாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கவோ அதன் அதிகாரத்தை குறைக்கவோ குடியரசு தலைவருக்கான (மத்திய அரசு) அதிகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது