காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அகற்றி சாதனை..

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 10 கிலோ எடையுள்ள கட்டியை கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கினர்.

காரைக்குடியைச் சேர்ந்த மீனாள் வயது 45 என்ற பெண்மணி கடந்த பல வருடங்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரேசன் கூறும்போது,15ஆம் தேதி கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்தவரை மருத்துவ பரிசோதனை மூலம் அவருக்கு வயிற்றில் 10 கிலோ எடை உள்ள கட்டி இருப்பதாக அறிந்து உடனடியாக, சிறப்பு அறுவை சிகிச்சை குழு உடன் ஆலோசனை செய்து அன்று இரவே நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து கற்றியை நான்கு மணி நேரம் போராடி அகற்றினோம்.


இப்பொழுது அந்த பெண்மணி நலமாக உள்ளார்.நோயாளி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதை அறிந்து எங்களுடைய டைம் ஹெல்த் கேர் ஃபவுண்டேஷன் மற்றும் சார்ட்டபிள் டிரஸ்ட் மூலமாக குறைந்த செலவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ,நோயாளியான பெண்மணி கூறும் போது நான் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்ததேன். தற்போது டாக்டர் குமரேசன் மூலம் நான் நலமாக உள்ளேன். குறைந்த செலவில் சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணமாக கோவையில் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு …

மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…

Recent Posts