தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக தமிழ்நாடு அரசு ஊரக
வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு
குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகர மற்றும் கிராம திட்டமிடல்
இயக்ககம், ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளில் பொறியியல் துறை
சார்ந்த ஒருங்கிணணந்த பொறியியல் பணிகளில் உள்ள மேற்பார்வையாளர்கள்
/ இளநிறை வரைவு அலுவலர், இளநிலைப் பொறியாளர், வரைவாளர்
பதவிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான
அறிவிக்கை எண் 05/2023, 03-02-2023 அன்று வெளியிடப்பட்டது.
மொத்தமுள்ள 1116 சிவில் இன்ஜினியரிங் காலி பணியிடங்களுக்கான
எழுத்துத் தேர்வு 27.05.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 15 தேர்வு
மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 19-09-2023
அன்று வெளியிடப்பட்டது.
மதிப்பெண் தரவரிசைப்படி 03-04-2024 முதல் 10-04-2024 வரை கலந்தாய்வு
TNPSC அலுவகத்தில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை மையமாகக் கொண்டுண்டு செயல்படும்
நமது PYRAMID IAS ACADEMY-ல் பயிற்சி பெற்ற சிவில் இன்ஜினியர்களில் 712
(JE & JDO, overseer, draftsman) பேர் மாநில அரசுகளில் பணியிடம் உறுதி
பெற்றுள்ளனர். இதில் 26 மாணவர்கள் அரசு பள்ளியில் தமிழ் வழியில்
பயின்ற மாணவர்கள் எங்களிடம் இலவசமாக பயிற்சி பெற்று
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பொறியியல் துறை
சார்ந்த பல்வேறு மத்திய மாநில அரசுகளின் பணி நிலைகளில் எங்கள்
மாணவர்கள் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். 2007-ல் இருந்து மாநில அரசின்
அனைத்து பொறியியல் சார்ந்த பணியிடங்களில் 60-75% வரை எங்கள்
மாணவர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளும்
அதை மெய்பிக்கிறது.
இவ்வாண்டு நடைபெற்ற மேற்பார்வையாளர் / இளநிலை வரைவு அலுவலர்,
இளநிலைப் பொறியாளர், வரைவாளர் பதவிக்கான தேர்வில் சிவில்
இன்ஜினியரிங் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் மொத்தமுள்ள 1116
காலிப்பணியிடங்களில் 712 பணிஇடங்களை எங்களது மாணவர்கள்
பெற்றுள்ளனர்.
மேற்கண்ட வெற்றியாளர்களுக்கு 12.05.2024 அன்று PYRAMID IAS ACADEMY-ல்
சாதனையாளர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்