கோவை – தேக்கம்பட்டியைச் சேர்ந்த தி.மு.கழகத்தின் மூத்த முன்னோடி பத்மஶ்ரீ, பெரியார் விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி (வயது 109) அவர்கள் காலமானார். திமுக மீது அதிக பற்று கொண்டவர்.
மறைந்த பாப்பம்பாள் பாட்டிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் குறிப்பில் ”என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன்.அண்ணா அறிவாலயத்திலும்,எனது இல்லத்திலும் பாப்பம்மாள் அவர்களை சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும்”