சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் முனைவர் சேது குமணனுக்கு Millionaire farmer of India (MFOI) விருது..

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் சேது குமணன் அவர்களுக்கு Millionaire farmer of India விருது வழங்கப்பட்டது.

01.12.2024 அன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயம் மற்றும் புத்தொழிளுக்கான கிரிஷி ஜாகரான் மற்றும் மஹிந்திரா tractors இணைந்து நடத்திய Millionaire farmer of India (MFOI) விழாவில் இயற்க்கை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தியதற்காக சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் சேது குமணன் அவர்களுக்கு Millionaire farmer of India விருதினை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்களால் வழங்கப்பட்டது.

இவ்விருது பெற்ற முனைவர் சேது குமணன் அவர்களுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
சிவகங்கை மாவட்டதில் கடந்த ஆண்டுகளில் இதுவரை 5 விவசாயிகள் இந்த மில்லினியர் விருது வாங்கியிருக்கிறார்கள். இந்த விருதுகளுக்கான நபர்களை தெரிவு செய்து அனுப்பும் பணியை இந்தியா முழுவதும் 731 மாவட்டங்களில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள் (KVK) செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தவருடத்திற்கான விருது, சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நபர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தோம். ஒன்று அரியக்குடி திரு.இளங்கோவன் மற்றொருவர் திரு.சேது குமணன். இருவருக்கும் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துகள்.

இவர்கள் போலவே கடந்த 2004 ம் ஆண்டில் தவத்திரு குருமகா சந்நிதானம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன கர்த்தர் நமது அடிகளார் பெருமகனாருக்கும் KVK மூலமாக பரிந்துரை செய்ததின் அடிப்படையில் இந்தியாவின் தலை சிறந்த விவசாயிக்கான விருது அப்போதைய பாரத பிரதமர் காலம்சென்ற திரு.வாஜ்பாயி அவர்களது திருக்கரங்களால் வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நினைவு கூர்வதில் வேளாண் அறிவியல் நிலையம் பெருமை கொள்கிறது.
செய்தி &படங்கள்
சிங்தேவ்

காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் இணைந்தனர்…

ஃபெஞ்சல் புயல் நிவரண பணிகளுக்காக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி…

Recent Posts