செட்டிநாடு பப்ளிக் பள்ளி பொங்கல் விழா: மாணவ,மாணவியர் உற்சாக கொண்டாட்டம்….

காரைக்குடி அருகே மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பாரம்பரிய நிகழ்வான பொங்கல் திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணை சேர்மன். திரு .K. அருண்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டினர் இருவர் பொங்கல் வைப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவர்களின் கலைப் போட்டிகளும், அறிவு திறன் சார்ந்த போட்டிகளும் நடைபெற்றது. சிறப்பு கோ -பூஜையும் நடைபெற்றது. போட்டிகள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மாணவர்களுக்கு கற்றுத் தரும் விதமாக அமைந்திருந்தது. கயிறு இழுத்தல், உறி அடித்தல், பட்டம் விடுதல் போன்ற போட்டிகள் சிறப்பாக அமைந்திருந்தன. மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பள்ளியின் சேர்மன் திரு .SP .குமரேசன் அவர்கள் தனது பொங்கல் தின நல் வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொண்டார். இவ்விழாவில் பள்ளியின் துணை சேர்மன் அவர்கள் தமது பொங்கல் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் தனது உரையில், மாணவர்கள் அனைவரும் பெற்றோரிடமிருந்து அனைத்து நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் .அதைப் போலவே எந்த துறையில் நீங்கள் சிறந்து விளங்கினாலும் எப்பொழுதும் விவசாயத் துறையில் ஒன்றான செடி வளர்ப்பு, தோட்டக்கலை போன்றவற்றிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

அடுத்ததாக, தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் . தியானம் என்பது மனிதனை எல்லா வகையிலும் ஒழுங்கு படுத்துகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது.அதனால், அன்றாடம் தியானத்தோடு ஏதேனும் சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வர வேண்டும் என்றும் ,இதன் மூலம் மனமும் ,உடலும் ஆரோக்கியமாக இருக்குமென்றும் எடுத்துரைத்தார். கல்வியை சிறந்த முறையில் கற்று வருவதோடு, உங்களிடம் உள்ள தனித்திறமைகளையும் ஆராய்ந்து அதில் சிறப்பு பெற வேண்டுமெனக் கூறினார்.

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் முதல்வர் திருமதி. உஷா குமாரி அவர்கள் தனது பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் .அவர் நம்பகுதியில்,எல்லா இடங்களிலும் வேறு வேறு பெயர்களில் இப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது .
இந்நிகழ்வு வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதை பறைசாற்றுகிறது. விழாவின் மூலம் மக்கள் தங்களது பண்பாட்டினையும், கலாச்சாரத்தையும் பரிமாறிக் கொள்கின்றனர் என்றார்.

எல்லா மக்களையும் ஒன்றிணைக்கும் விதமாக இத் திருவிழாக்கள் அமைகின்றன என்று கூறினார் .பள்ளியின் துணை முதல்வர் திருமதி . பிரேம சித்ரா அவர்களும் தனது பொங்கல் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர். கரும்பு சுவைத்தலுடன் விழா இனிதே நிறைவுற்றது.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை :காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சாதனை…

காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா: உற்சாகக் கொண்டாட்டம்…

Recent Posts