சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா :பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டு விழா..

சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டுவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற்றது.


1940 -பிப்ரவரி 10-ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளை 85 ஆண்டுகளாக மக்கள் சேவையை வழங்கி வருகிறது .
இதனையொட்டி 85-ஆம் ஆண்டு விழா பொள்ளாச்சி ஆர்.ஆர் .திரையங்க வீதியில் அமைந்துள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளையில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.


விழாவில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையர் திரு.கணேசன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கோவை மண்டல மேலாளார் திரு ஜோதி பிரகாஷ் கியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் பேசும் போது :- 85-வருடங்களாக பொள்ளாச்சி மக்களுக்கு சேவை புரிந்து வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கும், ஊழியர்களும் பாராட்டுகள் . இங்கு வங்கியின் வாடிக்கையாளர்களாக பல மூத்த குடிமக்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது வங்கிச் சேவையின் சிறப்பு தெரியவருகிறது. வங்கிச் சேவை ஏழை எளிய மக்களுக்கு அரசின் கடன் உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் இவ்வங்கி கிளை நுாற்றாண்டு கொண்டாட வாழ்த்துகிறேன் என்றார்.


பொள்ளாட்சி ஆணையர் பேசும் போது:- 85 வருடங்களாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வரும் வங்கி கிளையின் விழாவில் கலந்து கொள்வது பெருமைக்குரிய தருணம். தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ஒரு முறை பேசும் போது வாடிக்கையாளர்கள் நம் தொழிலை வளர்க்க வந்தவர்கள். அவர்களால் தான் நாம் என்று கூறியதை இங்கு நினைவு கூறுகிறேன் என்றார்.


கோவை மண்டல மேலாளர் பேசும் போது:- 1911-ஆம் ஆண்டு இந்தியர்களால் இந்தியாவில் தொடங்கப்பட்ட வங்கி, சேமிப்பு கணக்கை அறிமுகப்படுத்தியது, கடன் அட்டை வழங்கியது. பாதுகாப்பு பெட்டக வசதி கொண்டு வந்தது.பல்வேறு தொழில் நிறுவனங்கள் வளர காரணமாக இருந்தது எங்கள் வங்கி. அனைவருக்குமான வளர்ச்சிக்குத்தான் நாங்கள் சேவையாற்றுகிறோம். வங்கியில் கடன் பெற்று அதை முறையாக திருப்பி அளிக்கும் வாடிக்கையாளர்களை நாங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

முன்னதாக பொள்ளாச்சி கிளை முதுநிலை மேலாளர் புனிதவள்ளி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மூத்த வாடிக்கையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மூத்த வாடிக்கையாளர்கள் தங்களுக்குண்டான வங்கி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.


தென்செங்கம்பாளையம் கிளை மேலாளர் ஜெயப்பிரதா விழாவை தொகுத்து வழங்கினார். விழாவில் கோவை மண்டல அதிகாரிகள் அருண், பார்த்தன், சொக்கனுார் கிளை மேலாளர் புருஷோத்தமன் கலந்து கொண்டனர்.
விழாவினை கிளை உதவி மேலாளர் சிவநந்தினி , உதவி மேலாளர் தீபா ராமலெட்சுமி, வேளாண் அதிகாரி பத்மா மற்றும் வங்கி ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பழனியில் தைப்பூச திருவிழா :கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..,

தைபூச திருவிழா: முருகன் கோயில்களில் உற்சாக கொண்டாட்டம்..

Recent Posts