![](https://www.nadappu.com/wp-content/uploads/2021/12/Palani-Murugan-Temple-1024x576.jpg)
தமிழகம் மற்றும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் லடசக்கணக்கான பக்தர்கள் தமிழகம், கேரளாவிலிருந்து நடைபயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று திருக்கல்யாணம் முடிந்து இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
பக்தர்கள் பல நேர்த்திக்கடன்களை மேற்கொண்டுவருகின்றனர். பழநி காவல்துறையும் நகராட்சி நிர்வாகமும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு,சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இதுபோல் தமிழகத்தின் மற்ற முருகன் அலயங்களிலும். மலேசிய நாட்டில் புகழ்பெற்ற பத்துமலைக் குகையில் தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. பினாங்கு நகரில் சிறப்பாக நடைபெறுகிறது. சிங்கப்பூரிலும் உற்சாகமாக தைப்பூச திருவிழா கொண்டாட வருகின்றனர்.