முக்கிய செய்திகள்

வாட்ஸ் ஆப் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டிய விபரீத ஓட்டுநர் (வீடியோ)

25.12.2018 அன்று ராமநாதபுரத்திலிருந்து, புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்தில் தனது செல்போனில் வாட்ஸ் ஆப் -பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனை பேருந்தில் பயணித்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்டிருக்கிறார். பயணிகளின் உயிரைக் காக்க வேண்டிய பெரும் பொறுப்பு தனக்கிருப்பதை மறந்த இந்த ஓட்டுநரின் விபரீத பொறுப்பின்மை அனைவரையும் குலை நடுங்க வைக்கிறது.