முக்கிய செய்திகள்

ஆவின் நிறுவன கிளைகள் வெளிநாடுகளில் தொடங்கப்படும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

சிங்கப்பூர், கத்தார் மற்றும் அரபு நாடுகளில் ஆவின் நிறுவன கிளைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

நந்தனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் மட்டும் கிடைக்கும் வாவே பானம் ஆவின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படுகிறது என்றார்.

பாலில் இருந்து பாலாடைக்கட்டி எடுத்த பின் கிடைக்கும் நீரில் பழங்களின் எசென்ஸ், சீரக எசென்ஸ் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த பானம் தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் தமிழகத்தின் ஆவின் பொருட்களுக்கு வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்த அவர், திருப்பதி லட்டு தயாரிக்க ஆவின் நெய் அனுப்பப்படுகிறது என்றார்.