முக்கிய செய்திகள்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

ஆவின் பால் பாக்கெட்டுகளில் மிக விரைவில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மாநில தலைவரான நிர்மல் குமார், ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்க வேண்டும் என்றும், இதன்மூலம், ஒவ்வொரு இல்லங்களுக்கும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் எனவும் கூறியிருந்தார்
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விரைவில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்..