அபுதாபியின் முதல் இந்து கோயில் : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..


அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றள்ள மோடி, அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோயிலுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோயில் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதைத் தொடர்ந்து துபாய் செல்லும் மோடி, அங்கு இந்தியர்களிடையே உரையாற்ற உள்ளார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்றே பிரதமர் மோடி ஓமன் செல்ல உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள மோடிக்கு அபுதாபியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய கொடியை குறிக்கும் வகையில் பல்வேறு கட்டங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சியை சீரழித்த பாஜக அரசு : ப. சிதம்பரம் தாக்கு

ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் “கொம்பன்“ காளை உயிரிழப்பு..

Recent Posts