முக்கிய செய்திகள்

கொள்ளை லாபத்திற்கு தீணிகளை விற்ற திரையரங்குகள் மீது நடவடிக்கை!

உணவுப் பொருட்களை கொள்ளை லாபத்திற்கு விற்ற  114 திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 335 திரையரங்குகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் நலத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர், குளிர்பானம் மற்றும் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட விலைக்கும் மேல் விற்ற 72 திரையரங்கு கேண்டீன் உரிமையாளர்கள் மீதும், முகவரி, விலை, பொருள் அடைக்கப்பட்ட நாள் உள்ளிட்ட விவரங்களை அச்சிடாமல் விற்பனை செய்த 38 திரையரங்க உரிமையாளர்கள் மீதும்,  எடையளவு சட்ட விதிமீறல்கள் காரணமாக 4 திரையரங்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.