முக்கிய செய்திகள்

அன்புச்செழியன் நல்லவரா…?: சசிகுமார் சொன்ன பதில்

ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது மேலும் பல புகார்கள் குவிய வாய்ப்பிருப்பதாக நடிரும், இயக்குநருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.

திரையுலகைச் சேர்ந்த சிலர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக கருத்து கூறுவது தான் ஒன்றும் கூறுவதற்கி்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் தேதி திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நடிகர் சசிகுமார் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

அப்போது,  தனது உறவினர் அசோக்குமார் உயிரிழந்த விவகாரம் குறித்த ஆதாரங்களை சமர்ப்பித்த அவர், அசோக்குமாரின் கையெழுத்து மாதிரிகளையும் அளித்துள்ளார். இது தொடர்பாக இரண்டு மணி நேரம் விளக்கமளித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சசிகுமார், அன்புச்செழியன் மீது இன்னும் பல புகார்கள் குவிய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். திரைத்துறையினர் ஒருசிலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசுவது அவர்களது தனிப்பட்ட கருத்து எனவும், அதுகுறித்து தாம் கூறுவதற்கு எதுவுமில்லை எனவும் அப்போது பதிலளித்தார்.

Actor Sasikumar answer about Anbuchezhiyan