
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தனி நீதிபதி சுப்ரமணியம் அளித்த புகார் அடிப்படையில் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தியது.
விசாரணை முடிவில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கரோனா நேரத்தில் காணொலி விசாரணை நடத்தும் நீதிபதிகள் நீட் தேர்வுக்கு உத்தரவிடுவதா என சூர்யா தெரிவித்திருந்தார்.