முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டி…


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்.கே. நகரில் சுயேட்சையாக விஷால் போட்டியிட உள்ளார். விஷால் போட்டியிடுவதால் ஆர்.கே. நகரில் 5 முனை தேர்தல் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுவை திங்கள் கிழமை தாக்கல் செய்ய உள்ளார். நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்க பொதுச்செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு இயக்குநர் அமீர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி. சேகர் நடிகர் விஷால் தேர்தலுக்கு வருவது புத்திசாலித்தனமானது அல்ல என கூறியுள்ளார்.