நடிகை “நல்லெண்ணெய்” சித்ரா என்று அழைக்கப்படும் நடிகை சித்ரா சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
தமிழில் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பரிபலமானதால் நல்லெண்ணெய் சித்ரா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
1965-ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்,மலையாளப்படங்களில் நடித்துள்ளார்.
கே.பாலசந்தரால் ’அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ‘ராஜபார்வை’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர், மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ’ஆட்ட கலசம்’ படம் மூலம் ஹீரோயின் ஆனார். பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் மேலும் பிரபலமானார்..
திருமணமத்திற்குப் பிறகு அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சித்ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே அவர் உயிர் பிரிந்தது.