முக்கிய செய்திகள்

கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

மருத்துவப் பணிகள் தேர்வாணையத் தலைவராக இருந்த ராஜாராமன், பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக இருந்து வந்த பாலாஜி ஆகியோர்

கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பணிக்காலம் ஓராண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில்,

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.