
அ.இ.அ.தி.மு.கவின் 49-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் ஐந்து விளக்கு அருகில் அ.இ.அ.தி.மு.கவின் 49வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருகில் நகர செயலாளர் மெய்யப்பன், எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் வெங்களுர் வீரப்பன்,மாவட்ட இளைஞரணி இணி செயலாளர் சத்குரு தேவன், நகர இளைஞர் அணிச் செயலாளர் இ.எல்.தாகூர் உள்பட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது