அதிமுக 47 வது தொடக்க விழா : எம்ஜிஆர், ஜெ., சிலைகளுக்கு முதல்வர் மரியாதை..

அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அவருடன் துணை முதலமைச்சர் ஓபிஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.