அ.தி.மு.க., தி.மு.க., அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன..
அ.தி.மு.க., அணியில் பா.ம.கவுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப் பட்டது.
இதனையடுத்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவுடனான கூட்டணியில் நிபந்தனை ஏதும் விதிக்கப்பட வில்லை.40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மனித நேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உட்பட நான்கு பேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து பேசிய அவர். மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்.
அதி.முக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.அதற்கு ஏற்ப எங்களது வியூகம் அமையும் என்றார்.