அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. நாங்கள் கேட்ட 23 தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்துவிட்டதாக தேமுதிக பார்த்தசாரதி கூறினார். அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிக விலகியுள்ளதாக கூறினார்.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும். தொகுதிகளையும் ஒதக்க மறுத்ததால் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்களுடான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. தேமுதிக தனித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு நாளை தெரியும் என பார்த்தசாரதி தகவல் தெரிவித்தார். தனித்து போட்டியிடுவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஸ் பேட்டி:
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் இன்று தான் எங்கள் அனைவருக்கும் தீபாவளி என சென்னை தலைமை தேமுதிக அலுவலகத்தில் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் எனவும் கூறினார். அதிமுக அனைத்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பாமகவுக்கு ஆதவராக செயல்படுகிறார் என குற்றம் சாட்டுகிறார். பாமகவின் கொள்கை பரப்பு செயலாளல் போல் கே.பி.முனுசாமி செயல்படுகிறார் என கூறினார்.
அதிமுகவை வீழ்த்த தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் பணியாற்றுவார்கள் என கூறினார். ஒட்டுமொத்த தேமுதிக தொண்டர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் தேமுதிக-வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.