முக்கிய செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ., சிலை திறப்பு..


ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 7 அடி உயரமுள்ள அவரது உருவ சிலை, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. சிலையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த விழாவில், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழும் வெளியிடப்பட்டது.