கட்சி உத்தரவை மீறி செயல்பட்டதாக மேலும் 3 டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது அதிமுக சட்டமன்ற கொறடா ராஜேந்திரம் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு, அறந்தாங்கி எம்எல்ஏ ஏ.ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ வி.டி. கலைச்செல்வன் ஆகியோர் மீது இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரன், கட்சி விரோத நடவடிக்கைகளில் மூவரும் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.