அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா, ராமசாமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்தத் திருமணத்துக்கு ராமசாமியின் மனைவி மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் தடைவாங்கினார். இந்தநிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி டெல்லியில் சசிகலா புஷ்பாவுக்கும், ராமசாமிக்கும் திருமணம் நடைபெற்றது.