முக்கிய செய்திகள்

அ.தி.மு.க., வில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிளுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

அ.தி.மு.க., வில் புதிதாக வர்த்தக அணி கலைப்பிரிவு அணிகள் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்

அ.தி.மு.க., வில் அமைப்பு செயலாளர்களாக மோகன், முருகையா, பாண்டியன், சின்னத்துரை, செஞ்சி ராமச்சந்திரன், பரஞ்ஜோதி, நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக நிர்மலா பெரியசாமி, திரைப்பட இயக்குநர் லியாகத்அலிகானும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக இன்பதுரையும் நியமனம் செய்யப்பட்டனர்.