அதிமுகவில் இரட்டை தலைமையால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். தற்போதைய தேவை ஒற்றைத் தலைமையே என மாநில எம்.ஜி.ஆர் மன்றத் துணைச்செயலாளர் வெங்களூர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் வெங்களூர் வீரப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது..
அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படவில்லை இரட்டை தலைமையால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். தற்போதைய தேவை ஒற்றைத் தலைமையே என்றார் வெங்களூர் வீரப்பன்.
எம் ஜி ஆர் ஏழை எளியவருக்காகதொடங்கிய இயக்கம் தான் அதிமுக. அவர் ஆட்சிக் காலத்தில் கல்வி, சுகாதாம், சத்துணவு, பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார். அவருக்குப் பிறகு ஜெயலலிதா தாலிக்கு தங்கம், மாணவர் சமுதாயத்திற்கு லேப்டாப், இலவச பஸ் பாஸ், கோவில்களில் அன்னதானம் போன்ற பல திட்டங்களை கொண்டுவந்தார்.
இன்று இந்த இயக்கத்தை யாரோ ஆட்டிவைக்கிறார்கள் ஓ.பிஎஸ், இபிஎஸ் தங்களது சுயநலத்திற்காக இந்த இயக்கத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இரட்டை தலைமையை ஏற்க முடியாது நான் மட்டுமல்ல இலட்சோப இலட்சத் தொண்டர்களின் விருப்பமும் இதுதான். இருவர் மீதும் பல வழக்குகள் உளளதால் மோடியின் கைபாவையாக செயல்படுகிறார்கள்.
இன்று நாட்டின் நிலை என்ன பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை எளிய தொழிலாளர்கள் வாகனங்களுக்குப் பெட் ரோல் போடமுடியாமல் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்களின் அத்தியாவசியத் தேவையான பொருட்களின் விலையுர்வால் திணறி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் இவர்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை ஆளுநரிடம் மனுக் கொடுக்கும் மனுக்களை அவர் கிடப்பில் போட்டுவிடுகிறார்.
அன்றே அண்ணா சொன்னார்.“தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது” என்று அந்த நிலை இன்றுவரை தொடர்கதையாகவே உள்ளது என்றார்.
இவர்கள் இருவரும் தங்கள் சுயநலத்திற்கா எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா கொள்கையைக் குழிதோண்டி புதைத்துவிட்டனர். தொடர்ந்து அதிமுக தொண்டர்களைக் குழப்பி வருவதால் தொண்டர்கள் சோர்வாகிவிட்டனர்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக் காப்பற்றப்பட்ட மாபெரும் இயக்கத்தை சிதைத்து வருகின்றனர்.
மேலும் அவர் தனது மாநில எம்.ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் பதவியிலிந்தும், அதிமுகவிலிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார். இராஜினாமா குறித்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சசிகலா அரசியலுக்கு மீண்டும் வருவது குறித்த கேள்விக்கு அத்தைக்கு மீசை முளைத்த கதைதான் என்றார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்