முக்கிய செய்திகள்

அதிமுகவினர் போராட்டத்திற்கு பணிந்தது படக்குழு : சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க முடிவு..

சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர், ‘திருப்பூர்’ சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் போராட்டத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சுப்பிரமணியன் கூறியதாவது: அதிமுகவினர் மாநிலம் முழுக்க, சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து,

தயாரிப்பு தரப்பு கவனத்திற்கு கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்,

இன்று இரவு, எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என முடிவு செய்து, நாளை மதியம் முதல் அவையில்லாத காட்சிகள் மட்டும் திரையிடப்படும். தணிக்கை குழு அனுமதி பெற்று, இதை செய்வோம்.

இதுதொடர்பாக, முருகதாஸ், விஜய்யிடம் நான் பேசவில்லை. தயாரிப்பு தரப்பு இந்த தகவலை அவர்களுக்கு சொல்லியிருப்பார்கள்.

படத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்பெயரை குறிப்பிடும் காட்சிகள், ம்யூட் செய்யப்படும். எனவே அதிமுகவினர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு சுப்பிரமரணியம் தெரிவித்தார்.