இரட்டை இலை லஞ்ச வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம் : டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு..


இரட்டை இல்லை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு நீதிபதி அரவிந்த்குமார் அமர்விலிருந்து வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் இன்று முதல் விசாரிப்பார் என பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடந்தது. இதில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மற்றம் செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

412 நீட் தேர்வு மையங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்..

பாலியல் தொல்லை அளித்த ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு : உயர்நீதிமன்றத்தில் மனு..

Recent Posts