ஆப்கன் ராணுவத்தினர் தாலிபான் மீது தாக்குதல் : 52 தீவிரவாதிகள் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் தாலிபான் தீவிரவாத முகாம்கள் மீது, அந்நாட்டு ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் இரண்டு முக்கிய தளபதிகள் உட்பட 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து தாலிபான் இயக்கம் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.