
ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூல் சர்வதேச விமானநிலையத்தில் மக்கள் பெருமளவு கூடியுள்ளனர். விமானங்களில் ஏற முண்டியத்து வருகின்றனர்.
இந்நிலையில் விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் டயர் மீது அமர்ந்து சென்ற மூவர் கீழே விழுந்து உயிரிழந்தனர். காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் டயர் பகுதியில் அமர்ந்து சென்ற 3 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்.
தலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் இருப்பதால் அங்கிருந்து தப்பிச் செல்ல ஆயிரக்கணக்கானோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.