முக்கிய செய்திகள்

2019 உலக கோப்பை போட்டிற்கு ஆப்கானிஸ்தான் தகுதி..


2019-ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அயர்லாந்தை எதிர் கொண்டது. அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கான் அணி 2019 உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொள்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே 2019 உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து 150 ஆல் அவுட்,பின்னர் ஆடிய ஆப்கான் அணி 40 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.