முக்கிய செய்திகள்

ஆப்கான் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு..


ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான ஹெல்மாண்ட்ல் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகரான லஸ்கார்ஹாக் நகரில் உள்ள போலன் பகுதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஹெல்மாண்ட் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள தலிபான்கள், தலைநகரைச் சுற்றி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் தலிபான்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.