அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

லட்சத்தீவு, மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.