வேளாண் உள்கட்டமைப்பு ரூ. 1 லட்சம் கோடி நிதித் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

மத்திய துறையின், “வேளாண் உள்கட்டமைப்பு நிதி” திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் கோடி நிதி உதவித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் குளிர் சாதன சேமிப்பு மையங்கள், சேகரிப்பு மையங்கள், செயலாக்க அலகுகள் போன்ற சமூக விவசாய சொத்துக்களை உருவாக்குவதற்கு இந்த நிதி ஊக்கமளிக்கும். இந்தச் சொத்துக்கள் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களுக்கு அதிக மதிப்பைப் பெற உதவும்.
ஏனெனில் அவர்கள் தங்கள் பொருள்களை அதிக அளவில் சேமித்து வைப்பதன் மூலம் பொருள்கள் வீணாவதைக் குறைக்கவும், செயலாக்கம் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும். ரூ 1 லட்சம் கோடி நிதி வசதி, பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து நிதிதிட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும்; 12 பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கிகள் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளன.

இந்தத் திட்டங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க 3 சதவீத வட்டிக் குறைப்பு மற்றும் ரூ .2 கோடி வரை கடன் உத்தரவாதம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் பயனாளிகளில் விவசாயிகள், முதன்மை வேளாண் கடன் சங்கம் (PACS), சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) சுய உதவிக்குழுக்கள் (SHGs), கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGs), பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், தொடக்க நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில நிறுவனம் அல்லது உள்ளூர் ஆதரவு பெற்ற பொது-தனியார் கூட்டு நிதியுதவித் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.