தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது? என்பது குழப்பமாக இருந்து வந்தது.

அதை உறுதிபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 20-ந் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.1258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு…

எனது வளா்ச்சியை கண்டு எதிா்க்கட்சி பயப்படுகிறது : டிடிவி தினகரன்..

Recent Posts