ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்


ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 76% பங்குகளை விற்பதற்கான பூர்வாங்க ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா 2007ஆம் ஆண்டிலிருந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் இந்த நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகளை விற்க பூர்வாங்க ஒப்புதல் அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்தப் பங்குகளை விற்க விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் விருப்ப ஒப்பதல் அளித்துள்ளது. இதற்கான குறிப்பாணையும் வெளியிடப்பட்டது.

முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் அதன் பணியாளர்களை படிப்படியாக குறைப்பதுடன் சொத்துக்களையும் விற்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


 

மேற்குவங்க முதல்வர் மம்தா – சோனியா சந்திப்பு..

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களமிறங்கிய தினகரன் கட்சி..

Recent Posts