ஏர் இந்தியா விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய புதிய கட்டுப்பாடுகள்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுளை விதித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இயக்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா காலத்தில், அமெரிக்காவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு, ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. அதற்காக கட்டணங்களை வசூலிக்கிறது.

ஆனால், இந்தியாவில் உள்ள போக்குவரத்து விதிமுறைகள் காரணமாக அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி அனுமதி கிடைப்பது இல்லை.

இது சரியான நடைமுறைகள் இல்லை. வேறுபாடு காட்டப்படுகிறது. இதனால், அமெரிக்க நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்படுகிறது.