ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனையடுத்து அவர் முன்ஜாமின் கேட்டு டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், ஜூலை 5 வரை கைது செய்ய தடை விதித்தது. மேலும், மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், பதிலளிக்க அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து, ஜூலை 10ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்ததுடன், விசாரணையையும் கோர்ட் ஒத்திவைத்தது.