சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய விவசாய பெருமக்களின் சார்பில் திரு. வி.எம்.சிங் திரு. ராஜிவ் ஷெட்டி, திரு. அய்யாக்கண்ணு ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது ,விவசாய நலன்களுக்கு எதிராக செயல்படும் மத்தியில் ஆளும் மோடியின் அரசைக் கண்டித்து,வரும் நவம்பர் 28, 29, 30 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு கோரினர்.