
“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு அகில இந்திய தலைவர்கள் முதல் தமிழக கட்சித் தலைவர்களான ராமதாஸ், ஒபிஎஸ் உள்ளிட்ட 37 பேருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சோனியாகாந்தி, சரத் பவார், லாலு பிரசாத், பவன் கல்யாண், ஓவைசி உட்பட 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக தக்க நபர்களை நியமிக்குமாறு கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.