முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்…

தமிழகம் முழுவதும் நாளை போலியோ தடுப்பு முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில், முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வழக்கமாக 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படும்.

ஆனால், தற்போது ஒரே தவணையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதால், 50 ஆயிரம் முகாம்கள் அதற்காக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.