முக்கிய செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : அனைத்து சமூகத்தினரையும் இணைத்து நடத்தக்கோரி வழக்கு..

புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி -17ந்தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளது.

ஒரு தரப்பினர் சார்பில் மட்டுமே நடத்தப்படுவதாக கோவிந்தராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று பிற்பகல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.