மக்களவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
நாடு முழுவதும் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, அரசியல் கட்சிகள் கூட்டணி உடன்பாட்டில் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மதிமுக 2, விசிக 2 தொகுதிகள் கேட்டுள்ளனர்.
ஆனால், தலா ஒரு தொகுதி மட்டுமே திமுக கொடுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுகவுக்கு திமுக நேற்று அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, திமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு ஓரிரு நாளில் முடிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது..