முக்கிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ததற்கான காரணம் என்ன: டெல்லி உயர்நீதிமன்றம்..


தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கான அடிப்படை காரணம் என்ன என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.