அழிவை நோக்கி பயணிக்கும் அமேசான் காடுகள் : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…


காடுகளை அழிப்பது தொடர்ந்தால், உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேஸான் காடுகளை பாதுகாக்க முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததுமான அமேசான் மழைக்காடு, 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் படர்ந்து விரிந்திருக்கிறது. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தொடர்புடைய சயின்ஸ் அட்வான்ஸ் என்னும் இதழ், அமேசான் காடுகள் தற்போது பேரழிவை சந்தித்து வருவதாக தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இதழில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; மனிதர்கள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும், அமேசான் காடுகள் 40 சதவீத அழிக்கப்பட்டு விட்டது. சமீபத்தில் ஏற்பட்டு வரும் வெப்பநிலை உயர்வுக்கும், காடுகள் தீப்பற்றி எரிவதற்கும் அமேஸான் காடுகள் அழிக்கப்படுவது முக்கிய காரணி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே காலநிலை மாற்றம் மற்றும் காடுகளை அழிப்பது தொடர்ந்தால், உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேஸான் காடுகளை பாதுகாக்க முடியாது என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.