முக்கிய செய்திகள்

அம்பேத்கர் நினைவு தினத்தில் ஜாதி வெறி தூண்டியவர் மீது நடவடிக்கை: பாமக மனு..

ஜாதி வெறியை தூண்டும் வகையில் அம்பேத்கர் நினைவு தினத்தில் முழக்கம் எழுப்பிய நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் காவல் துறையிடம் புகார் அளித்து வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பா.ம.க மாநில துணை பொது செயலாளர் அருள் மற்றும் கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் சரண்ராஜ் அளித்த பேட்டியில்,

”அம்பேத்கர் நினைவு நாளில் ஜாதி வெறியை தூண்டும் வகையில் நபர் ஒருவர் முழக்கமிட்டு சமூக வலைதளங்களில் காணொளியை பரப்பி வருகிறார்.

பெண்களை இழிவு செய்தும் மோதலை ஏற்படுத்தும் வகையில் பரவி வரும் காணொளியில் உள்ள நபர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

மேலும் இவர்கள் மீது நடவடிக்கை கோரி பா.ம.க மற்றும் கொங்கு மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் சேலம் மாநகர ஆணையாளர் மற்றும் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

அம்பேத்கரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக முழக்கமிட்ட நபர் யார் என்று கண்டறிந்து சட்ட ரீதியாka கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.