அம்பேத்கர் பெயரின் நடுவில் ‘ராம்ஜி’ சேர்க்க உ.பி மாநில அரசு உத்தரவு..


அம்பேத்கர் பெயரின் நடுவில் ராம்ஜி என்ற பெயரை சேர்க்க உ.பி மாநில அரசு உத்தரவிட்டது. இங்கு, இதுவரை டாக்டர்.பீம்ராவ் அம்பேத்கர் என்றே பெயரே அனைத்து அரசு ஆவணங்களிலும் இடம்பெற்று வந்தது. அம்மாநில ஆளுநர் ராம் நாயக்கின் பரிந்துரையில், டாக்டர்.பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.