அமெரிக்காவின் 6 மாகாணங்களில் கனமழை : வெள்ளப் பெருக்கால் பல்லாயிரம் பேர் பாதிப்பு..

அமெரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டின் மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா, விஸ்கொன்சின், மிசூரி, மினசோட்டா மற்றும் தெற்கு டகோட்டாவில் பனிக்காலத்துக்கு பிந்தைய திடீர் புயலால் மழை கொட்டி தீர்த்தது.

அத்துடன் உறைபனியும் உருகியதால் அந்த மாகாணங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், ஏராளமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சாலைகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நெப்ராஸ்கா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 2 பேர் மாயமாகினர். விஸ்கொன்சின், தெற்கு டகோட்டாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உழைத்திட திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக செய்தது என்ன..? : பிரியங்கா காந்தி கேள்வி…

Recent Posts