அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை உளவுப்படையினர் கைப்பற்றினர்.
அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அவ்வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளிக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை இடைமறித்து, கைப்பற்றியதாக அமெரிக்க உளவுப்படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
அந்த பார்செல்களில் இருந்த வெடிப்பொருள் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும் கொடையாளருமான ஜார்ஜ் சோரோஸ் வீட்டில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்களை ஒத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.